Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு …!!

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த வாரம் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பீட்ரூட் தற்போது 35 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெண்டைக்காய் 20 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ முட்டைகோஸ் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் உஜாலா கத்திரிக்காய் 40 ரூபாயில் இருந்து 20 ரூபாயாகவும், வரி கத்திரிக்காய் 25 ரூபாயிலிருந்து 15 ரூபாயாகவும் குறைந்துள்ளது.

புடலை, முள்ளங்கி, உருளை போன்ற காய்களின் விலை கிலோவுக்கு 5 ரூபாய் குறைந்துள்ளது. வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் லாரியின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே காய்கறிகளின் விலை குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |