Categories
மாவட்ட செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில்…. காய்கறி விலை நிலவரம் இதுதான்….!!

தமிழகத்தில் கடந்த மாதம் தொடர் மழையின் காரணமாக காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்து உள்ளது. அதாவது ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனைப் போலவே மற்ற காய்கறி விலையும் அதிகரித்துள்ளது.

அதாவது மொத்த விலையில் நாட்டுத் தக்காளி ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 மற்றும் சில்லறை விலையில் ரூ.80 முதல் ரூ.90 விற்பனை செய்யப்படுகிறது. நவீன் தக்காளி மொத்த விலையில் ரூ.70 முதல் ரூ.80 விற்கப்படும் நிலையில், சில்லறை விலையில் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனையாகிறது. பெரிய வெங்காயம் மொத்த விலை ரூ.40 மற்றும் சில்லறை விலை ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் ஒரு கிலோ ரூ.25 விற்கப்படும் உருளைக் கிழங்கு சில்லறை விலையில் ரூ.35 விற்பனை செய்யப்படுகிறது. கேரட், பீன்ஸ், கத்தரிக்காய் உள்ளிட்டவைகளின் விலை மொத்த விலையை விட சில்லறை விலையில் சற்று அதிகரித்து காணப்படுகிறது.

Categories

Tech |