Categories
மாநில செய்திகள்

கோயம்பேடு மேம்பாலம்… மாத இறுதிக்குள் திறக்க திட்டம்..!!

போக்குவரத்து நெரிசலை குறைக்க கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் எதிரே கட்டப்பட்ட மேம்பாலத்தை இம்மாத இறுதிக்குள் திறக்க அலுவலர்கள் திட்டமிட்டு உள்ளனர் 

சென்னையிலுள்ள கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 100 அடி சாலை – காளியம்மன் கோவில் சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் 94 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இது ஏறக்குறைய 90 விழுக்காடு பணிகள் முடிவடைந்து விட்டது.

தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கோயம்பேடு மேம்பால கட்டுமான பணிகள் முடிந்து விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதேபோல பொது மக்களும் பாலம் விரைவாக திறக்கப்பட வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சூழலில் தீபாவளிக்கு முன் திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதலமைச்சர் முக ஸ்டாலின் மேம்பாலத்தை திறந்து வைப்பார் என  தெரிகிறது.

Categories

Tech |