பெங்களூருவில் கோவிலுக்குள் வயது சிறுமியை பலாத்காரம் செய்த 68 வயது பூசாரியை போலீசார் கைது செய்தனர்.
தற்போது பெண்களுக்கு எதிரான பல்வேறு வன்கொடுமைகள் நிகழ்ந்து வருகின்றது. பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் குழந்தைகளை வெளியில் அனுப்புவதற்கு கூட அஞ்சுகின்றனர். கோவில் என்பது மிகவும் புனிதமான ஒரு பகுதி. கோவிலில் பூசாரியாக இருப்பவரை மக்கள் சாமிக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்க்கிறார்கள். ஆனால் அவர்களை இவ்வாறு செய்வது மேலும் பயத்தை அதிகரிக்கின்றது. பெண் குழந்தைகளை யாரை நம்பியும் விட்டுச் செல்லக்கூடாது என்பது உறுதியாகிறது.
பெங்களூருவில் கோவிலில் வைத்து 68 வயது பூசாரி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கோவிலுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பூசாரி வெங்கதரமனப்பா உணவுப்பொருட்களை வழங்குவதற்காக கோவிலுக்குள் வரவழைத்து வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகள், சிறுமியின் மருத்துவ அறிக்கை, பூவிற்கும் பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பூசாரி கைது செய்யப்பட்டார்.