தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான முப்பத்தி இரண்டு கிரவுண்டு நிலம் அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 141 கிரவுண்ட் நிலம் காஞ்சி கோவிலுக்கு சொந்தமாக உள்ளது. இதில் 32 கிரவுண்ட் நிலத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வந்த நிலையில் தற்போது அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.