இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கணினி வழி வாடகை வசூல் மூலம் 200 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார். முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பெயரில் கடந்த 8.10.2021 அன்று கணினி வழியாக கோவில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதி தொடங்கப்பட்டது .அன்றைய தினம் முதல் இன்று வரை ரசீது வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆசையா சொத்துக்களுக்கு பசலி ஆண்டு முறையில் வாடகை மற்றும் குத்தகை கணக்கிடப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நடவடிக்கையால் ரூபாய் 200 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் மண்டல வாரியாக இணை ஆணையர் சென்னை-1 ரூ.30.1 கோடியும், இணை ஆணையர் சென்னை 2 ரூ.23.91 கோடியும், இணை ஆணையர் திருச்சிராப்பள்ளி ரூ. 16.31 கோடியும், இணை ஆணையர் காஞ்சிபுரம் ரூ. 13.55 கோடியும், இணை ஆணையர் நாகப்பட்டினம் ரூ.13.23 கோடியும், இணை ஆணையர் மயிலாடுதுறை ரூ.12.33 கோடியும், இணை ஆணையர் தூத்துக்குடி ரூ.10.17 கோடியும், இணை ஆணையர் மதுரை ரூ. 10.1 கோடியும், இணை ஆணையர் திண்டுக்கல் ரூ. 9.71 கோடியும், இணை ஆணையர் திருநெல்வேலி ரூ.8.28 கோடியும் என மண்டல வாரியாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் அதிக வசூல் செய்யப்பட்ட 10 முக்கியமான கோவில்களான சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் ரூ.6.29 கோடியும், பழநி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ரூ.4.42 கோடியும், திருச்சி, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் ரூ.4.33 கோடியும், மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ரூ. 3.05 கோடியும், சென்னை, பூங்கா நகர் ஏகாம்ப ரேஸ்வரர் கோவிலில் ரூ.2.99 கோடியும், திருச்சி பஞ்சவர்ணசுவாமி கோவிலில் ரூ.2.47 கோடியும், சென்னை பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் ரூ.2.42 கோடியும், சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் ரூ.2.32 கோடியும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.2.04 கோடியும், திருநெல்வேலி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி கோவிலில் ரூ.1.75 கோடியும் இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிர தொடர் நடவடிக்கையால் வாடகை தொகையும், நிலுவை தொகையும் வசூல் செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.