திருக்கோவில்களில் தேவாரம், திருவாசகம், திவ்யபிரபந்தம் ஆகியவற்றோடு சேர்த்து திருக்குறள் வகுப்புகளும் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதற்காக 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சட்டப்பேரவையில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது:
தீராக் காதல் திருக்குறள் என்ற பெயரில் 2 கோடி செலவில் திருக்கோவில்களில் திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறினார்.
இன்றைய தலைமுறையினரை திருக்குறள் சென்றடையும் வகையில் பல்சுவை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சிகள் உடன் இணைந்து இணைய வடிவிலும், அசைவூட்டம் படங்கள், வினாடி-வினா, குறும்படங்கள், நடனம் போன்ற கலை வடிவங்களோடு நிகழ்ச்சி நடத்தப்படும். கடந்த ஆண்டுகளில் திருக்குறள் முற்றோதல் செய்து திருக்குறள் பரிசுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 219 மாணவர்களுக்கு இந்த ஆண்டு பரிசுத்தொகை வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் 70 மாணவர்கள் என்ற உச்சவரம்பு நீக்கப்பட்டு, பரிசுத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.