கோயில்களில் இறைவன் சன்னதி முன்பாக நாம் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கலாமா? வணங்க கூடாதா? என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.
கோயில்கள் என்றால் அங்கு பல சன்னதிகள் இருக்கும். குறிப்பாக சிவன் கோயில் என்றால் அங்கு, முதன்மையாக விநாயகர், முருகன், ஐயப்பன் உள்ளிட்ட தெய்வங்களின் சன்னதிகள் காணப்படும். அனைத்து சன்னதிகளிலும் வழிபாடு செய்வது நம்முடைய வழக்கம். ஆனால், அங்குள்ள ஒவ்வொரு சன்னதியிலும் விழுந்து வணங்கக்கூடாது. அந்த கோயிலின் கொடிமரத்தின் முன்பு மட்டுமே விழுந்து வணங்கலாம்.
கொடிமரத்தின் முன்பு ஆண்கள் தலை, இரு கைகள், இரு தோள்கள், இரு முழங்கால்கள் உள்ளிட்டவை தரையில் படுமாறு வணங்க வேண்டும். பெண்கள் தலை, இரு கைகள், இரு முழங்கால்கள் என ஐந்து உறுப்புகள் நிலத்தில் படுமாறு வணங்குவது சிறப்பு. ஆண்கள் வழிபடுவது அஷ்டாங்க நமஸ்காரம் என்றும், பெண்கள் வழிபடுவது பஞ்சாங்க நமஸ்காரம் என்றும் கூறப்படும். ‘அஷ்டம்’ என்றால் எட்டு, ‘பஞ்ச’ என்றால் ஐந்து எனவும் பொருள்படும்.