தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர் உணவு இல்லாமல் தவித்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் கோவில்கள் மூலம் நோயாளிகளுக்கும் அவர்களது உதவியாளர்களும் தொடர்ந்து உணவு வழங்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். அவ்வகையில் மே 12-ஆம் தேதி முதல் தினசரி ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் ஜூன் 14 ஆம் தேதி வரை உணவு பொட்டலங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.