கோயில் இடத்தில் உள்ள வாடகைதாரர்கள் இணைய வழியில் வாடகை செலுத்தலாம் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு, கோயில் இடத்துக்கான வாடகையை ஆன்லைனில் செலுத்தும் புதிய வசதியை சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் துவக்கி வைத்தார்.. அதன்பின் பேசிய அவர், கோயில் இடத்தில் உள்ள வாடகைதாரர்கள் இணைய வழியில் வாடகை செலுத்தலாம். இணையவழி வாடகை மூலம், எவ்வளவு வாடகை பெறப்படுகிறது என்பதை சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்.
மேலும் அவர், இணைய வழியில் செலுத்த முடியாதவர்கள் நேரடியாக செலுத்தலாம். நேரடியாக வாடகை செலுத்துவோரின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்..