திருச்சி மாவட்டம் துறையூர் அருகே திமுக கவுன்சிலரின் கணவர் கோவில் கருவறைக்கு சென்று பூசாரியை தாக்கிய சம்பவத்தில் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
துறையூரை அடுத்த கண்ணனூரில் அங்காள பரமேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பூஜை செய்வதில் முறை மாற்றம் பிரச்சனையால் அறங்காவலர் குழுத்தலைவர் காசிராஜனின் மகனும் கண்ணனூர் திமுக கவுன்சிலர் பேபி என்பவரின் கணவருமான லெனின் கோவிலை பூட்டி உள்ளரர்.
எதிர்த்தரப்பு பூசாரி ஓம். பிரகாஷ் என்பவரும் மற்றொரு பூட்டால் கோவிலை பூட்டி விட்டுச் சென்றுள்ளார். நேற்று மீண்டும் கோவிலை திறந்து பூஜை செய்த பூசாரி ஓம். பிரகாஷ்சை திமுக கவுன்சிலரின் கணவர் லெனின் கருவறைக்குச் சென்று தாக்கி உள்ளார். இந்த பிரச்சனை காரணமாக கோவிலில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.