ஜெர்மனியில் சொற்பொழிவு அரங்கத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கிருந்த பொது மக்களின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.
ஜெர்மனியிலுள்ள ஹீடெல்பெர்க் என்னும் பகுதியில் சொற்பொழிவு அரங்கம் ஒன்று உள்ளது. இந்த அரங்கத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த அப்பாவி பொது மக்களின் மீது திடீரென துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டினால் பலரும் படுகாயமடைந்துள்ளார்கள். இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் அந்த மர்ம நபரை அதிரடியாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்கள்.