Categories
உலக செய்திகள்

கோரத்தாண்டவமாடும் கொரோனா…. அமெரிக்காவில் நேற்று மட்டும் இவ்வளவா…??

அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமாக உயர்ந்து வருகின்றது. இந்நிலையில் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5.78 கோடி ஆகும். அமெரிக்காவில் தற்போது காட்டுத்தீயாய் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலினால் நேற்றைய தினம் மட்டும் இரண்டு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,376,763 ஆகும். மேலும் அதிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை நான்கு கோடியாகும். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் மூத்த மகனாகிய டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர்(42) கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |