டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடிய கார் கால்வாயில் பாய்ந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் உள்ள கொல்லம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காரில் சென்றுள்ளனர்.அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் அதிவேகமாக சீறிப் பாய்ந்து அங்கு உள்ள கால்வாயில் பாய்ந்தது. இதனை கண்ட பொதுமக்கள் உடனே தீயணைப்பு துறையை அழைத்தனர்.
அதன்பின் தீயணைப்புத் துறையினர் வந்து, காரையும் அதிலிருந்தவர்களையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்தில் காரில் இருந்த மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து இந்த கோர சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.