பெரம்பலூரில் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர நிர்வாகக்குழு கூட்டம் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. அதற்கு தலைவர் வள்ளுவன் நம்பி தலைமை தாங்கினார். அந்தக் கூட்டத்தில் குன்னம் பகுதியில் வருகின்ற 24-ஆம் தேதி புதிதாக குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் கோர்ட்டு திறக்க உத்தேசித்துள்ளதை கைவிட வெள்ளிக்கிழமை தொடங்கி வருகிற 22-ஆம் தேதி வரை ஐகோர்ட்டின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெரம்பலூர் மாவட்ட அனைத்து கோர்ட்டுகளிலும் பணி புறக்கணிப்பு செய்வதென்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வருகின்ற 16-ஆம் தேதி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டமும், 19-ஆம் தேதி ஆர்ப்பாட்டமும் நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 9-ஆம் தேதி முதல் பார் அசோசியேஷன் அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.