Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி… மாணவர் சங்கத்தினர் போராட்டம்… வங்கியை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு….!!

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் வங்கியை முற்றுகையிட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அதிகரிக்கும் மாணவிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும், புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் நாகராஜ் தலைமை தாங்கியுள்ளார்.

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய மாணவ சங்கத்தினர்  அப்பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை முற்றுகையிட முயன்றுள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் தடையை மீறி வங்கியை முற்றுகையிட முயன்றதால் போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேரை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து மாலையில் விடுவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |