கோரிக்கைகளை வலியுறுத்தி மறவர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கியுள்ளனர். இந்நிலையில் மாவட்ட மறவர் சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசின் உத்தரவின்படி சீர்மரபினர், சீர்மரபினர் பழங்குடியினர் என்ற சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மறவர் சங்கத்தின் கூட்டமைப்பு தலைவர் முத்துகுமார் ஆட்சியரிடம் மனுவை அளித்துள்ளனர்.
இதேபோல் சீர்மரபினர் நல சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு இதுவரை ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட மனுக்களின் நகல்களை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ஆட்சியரிடம் பூரண மதுவிலக்கு, முதியோர் உதவித்தொகை, சீரமைப்பு சான்றிதழ் வழங்க கோரி பல்வேறு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சீர்மரபினர் நல சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கியுள்ளார்.