Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி… மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்… கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு…!!

உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்று எராளமான மாற்றுதிறனாளிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு முல்லை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை 1,500ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆர்பாட்டத்திற்கு முல்லை மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் செயலாளர் கருப்பையா, மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |