Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி… கவன ஈர்ப்பு போராட்டம்… ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி குடிநீர் மேல்நிலைதொட்டி இயக்குபவர்கள், தூய்மைப்பணி காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சார்பில் தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் துப்புரவு பணியாளர்களுக்கும், குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கும்  காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும், தூய்மை காவ பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகையாக 15,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |