Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோரிக்கைகளை வலியுறுத்தி… வருவாய்துறையினர் ஆர்ப்பாட்டம்… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் பல இடங்களில் ஆர்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், அவர்களின் குடும்பத்தினர் அரசின் அறிவிப்பின் படி 25லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பட்டதாரி இல்லாத பணியாளர்களுக்கு துணை தாசில்தார் பதவி உயர்வை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட செயலாளர் கண்ணன், பொருளாளர் வடிவேல் உள்பட பல்வேறு அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். இதேபோல் மாவட்டத்தில் போடி, ஆண்டிபட்டி, உத்தமபாளையம், பெரியகுளம் போன்ற பகுதிகளிலும் வருவாய்த்துறையினர் கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதிகளில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |