ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விசுவாசபுரத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் எப்.சி கட்டணத்தை குறைக்க வேண்டும். அதன்பிறகு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்திய எப்.சி கட்டணம் 10% திரும்ப பெற வேண்டும். இதனையடுத்து ஆன்லைன் மூலமாக அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும்.
அதன்பிறகு மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை அமல்படுத்த கூடாது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பொன் சோபராஜ் தலைமை தாங்கினார். மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட ஆட்டோ சங்க தலைவர் மரிய ஸ்டீபன், செல்லையா, ராஜா, ராஜகுமார், மணிகண்டன், பிரின்ஸ் ஆசீர், பெல்லி பென், வடிவேல் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.