டெல்லி விவசாயிகளின் போராட்டம் பற்றி பிரதமர் மோடியுடன் சேர்த்து ட்விட்டரில் ஒரு வாசகம் ட்ரெண்டாகி வருகிறது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது வரை விவசாய சங்கங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே 13 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் அதில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்ததால் இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் டிராக்டர் பேரணி, சாலை மறியல் என பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
அதுமட்டுமன்றி தற்போது வரை போராட்ட களத்தில் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் விவசாயிகளுக்கு ஆதரவு செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் #FarmersCallPMforDebate என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறது. இதை ஏற்று பிரதமரே நேரடியாக விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.