இந்தியாவை இந்து நாடாக அறிவிக்காவிட்டால் ஜல சமாதி அடைந்து விடுவேன் என பிரபல சாமியார் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியின் தபஸ்வி மடத்தில் சாமியாராக இருப்பவர் சத்குரு ஆச்சாரியா மஹாராஜ். இவர் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் மற்றும் முஸ்லீம் , கிறிஸ்தவர்களின் தேசிய குடியுரிமை ரத்து செய்யப்படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இவர்தான் கோரிக்கை நிறைவேறாவிட்டால் சரயூ நதியில் ஜல சமாதி அடைந்து விடுவேன் எனவும் கூறியுள்ளார். இவர் ஏற்கனவே அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து போராட்டம் நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சாமியார் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் வரும் அக்டோபர் 2-ஆம் தேதிக்குள் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்காவிட்டால் நான் ஜல சமாதி அடைந்து விடுவேன். மேலும் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் தேசியக்குடியுரிமையும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.