தேனி மாவட்டத்தில் குள்ளப்புரம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த மே மாதம் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது அந்த வழியாக ஊர்வலம் சென்ற பெண்களை ஒரு பிரிவினர் தரக் குறைவாக பேசியது மட்டுமல்லாமல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உடல்நல குறைவால் உயிரிழந்த மூதாட்டியின் உடலை அந்த பாதை வழியாக கொண்டு சென்ற போது அதே பிரிவினர் இந்த பாதையில் செல்லக்கூடாது என பிரச்சனை செய்தனர். இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை மேற்கொண்டு பிரச்சினையை முடித்துள்ளனர்.
அந்தப் பகுதியில் இது போல் தொடர்ச்சியாக பிரச்சனை நடைபெறுவதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் தேனி கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பொதுமக்களை தடுத்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போலீசார் தங்கள் பிரச்சினை குறித்து நடவடிக்கைப்படும் என கூறியுள்ளனர். அதன்பின் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று தங்களது கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். இந்த மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.