Categories
அரசியல்

“கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டம் வெடிக்கும்…!!” மேகலாயா ஆளுநர் எச்சரிக்கை…!!

மேகலாயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்,ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “மத்திய அரசுக்கு நான் ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன் விவசாயிகளிடம் மட்டும் மோதி பார்க்காதீர்கள். அவர்கள் நீங்கள் நினைப்பதை விட மிகவும் ஆபத்தானவர்கள். அவர்களுக்கு என்ன தேவையோ அதைப் பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள், எதையும் எடுத்துக் கொள்வார்கள். போராட்டத்தின் மூலம் பெற முடியாததை விவசாயிகளால் வன்முறை மூலம் பெற முடியும் என்பதை மத்திய அரசு ஒருபோதும் மறக்கக்கூடாது.

கோரிக்கைகளை எவ்வாறு நிறைவேற்றிக் கொள்ளவேண்டும் என்பது விவசாயிகளுக்கு நன்றாக தெரியும். அவர்கள் உங்களிடம் மண்டியிட்டு கேட்பார்கள் என ஒருபோதும் எண்ணிவிட வேண்டாம் அவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை என்றால் மீண்டும் போராட்டம் வெடிக்கும். மத்திய அரசுடன் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்தப் பகையும் இல்லை. ஆனால் விவசாயிகளுக்கு ஒன்று என்றால் நான் என் பதவியையும் துச்சமாகக் கருதி தூக்கி எறிவேன்.!” இவ்வாறு அவர் கூறினார்.

Categories

Tech |