சேலம் மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக குஜராத்திலிருந்து வந்த போலீஸ் ஏட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்திலிருந்து தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஆயுதப்படை வீரர்கள் 85 பேர் சேலம் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். இந்தஆயுதப்படை வீரர்கள் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் தங்கியிருந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணிக்கு வந்தவர்களில் ஒருவரான போலீஸ் ஏட்டு ஜிதேந்திர சூர்யவன்ஷிக்கு உடல் நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அப்போது ஜிதேந்திர சூர்யவன்ஷிக்கு கொரோனா பரிசோதனை செய்த போது தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் ஜிதேந்திர சூர்யவன்ஷி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் சுகாதாரத்துறை ஊழியர்கள் உடன் பணிபுரிந்த மற்றவர்களுக்கும் தொற்று இருக்கிறதா என சோதனை செய்து வருகின்றனர்.