செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், சின்னம்மா அவங்க முயற்சி வெற்றி பெறுவதற்கு நான் வாழ்த்துகிறேன். நான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எங்களுடைய சின்னம் குக்கர் சின்னம். நாங்க வெற்றி பெறனும் அம்மாவோட ஆட்சி அமைக்கணும், அம்மாவின் உண்மையான ஆட்சி அமைக்கணும் என நாங்க மக்கள் மன்றத்துல உழைத்துக் கொண்டிருக்கிறோம். அதனால இன்னொரு கட்சி வீணா போகுதுன்னு வருத்தம் தான் பட முடியும், வேற என்ன செய்ய முடியும்.
இப்போ ஒரு சொத்து இருக்கு; மூதாதையர்கள் சொத்துன்னு வச்சுக்கோங்க. கோர்ட் இடத்திலிருந்து தேர்தல் ஆணையம் அந்த சொத்து அவங்களுக்கு சொந்தம் என்று சொல் சொன்னால் நீங்கள் என்ன பண்ண முடியும் ? உங்க தாத்தா சொத்து; உங்க பங்காளிக்கு போயிட்டு என்றால்…. அவங்க தவறா பயன்படுத்தினால் என்ன பண்ண முடியும் ? உச்ச நீதிமன்றம் வரைக்கும் போராடியாச்சி. அது பழனிச்சாமி, பன்னீர் செல்வத்துக்கு தான் பயன்படுத்துற உரிமை இருக்குன்னு உச்சநீதிமன்றம் சொன்னதுக்கு அப்புறம் , இதுல டிடிவி தினகரனோ, இல்ல வேற யாறோ என்ன செய்ய முடியும்னு நினைக்கிறீங்க ?
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை தடுக்க முடியாது என்று புரட்சி தலைவர் சொன்ன மாதிரி, அந்த தவறானவர்கள் அவர்களாக திருந்தினால் தான் அந்தக் கட்சி பிழைக்கும்; இல்லனா வருங்காலத்தில் அடுத்த தேர்தல் எப்ப வருதோ, அதுல நாங்க நிச்சயம் வெற்றி பெறுவோம்; அந்த கட்சியை மீட்டெடுப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு. அதுதான் கிளியரா சொல்லிட்டேனே. இதுல நான் இருந்த கட்சி.. ஆமா இப்போ எங்க அம்மாவுடைய சொத்து, அப்பாவுடைய சொத்து கோர்ட்டு மூலம் பங்காளிக்கு போனதுக்கு அப்புறம் அந்த பிராப்பர்ட்டியை அழிக்கிறப்போ நீங்க வெளியே இருந்து தானே பார்த்து வருத்தப்பட முடியும் என தெரிவித்தார்.