Categories
அரசியல் மாநில செய்திகள்

கோர்ட் இப்படி பண்ணலாமா ? நீதிபதி பேசியது நியாயமா ? வேதனைப்பட்ட எச்.ராஜா …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் உடைய நீதிபதி நூர்புர் சர்மா வழக்கில் சொன்ன கருத்திலே எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால் நூர்புர் சர்மா அவர்களுடைய வழக்கு என்ன ? எல்லா ஊர்லயும் இருக்கிற என் வழக்கை டெல்லிக்கு கொண்டு வரணும் என்று, அந்த அம்மா தள்ளுபடி பண்ண சொல்லி கேட்டார்களா கேட்கவில்லை, நான் வழக்கை நடத்திக் கொள்கிறேன்.

தப்பா பேசி இருந்தால் என்னை சட்டம் தண்டிக்கலாம். அப்படி என்றால் அதற்கு பொறுப்பு இல்லாத மாதிரியா நீதிபதி பேசியிருக்கிறார்… அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால் ஹிந்து கடவுள்கள் சீதாபிரட்டியாரையும், சரஸ்வதியையும் நிர்வாணமாக படம் வரைந்து, தான் ஒரு மிகப்பெரிய இந்து விரோதி அநாகரிகமானவன் என்ற காட்டிக்கொண்ட எம். ஹுசைனுக்கு எதிராக இந்தியா முழுவதும் வழக்கு இருந்தது. அதை ஓரிடத்திற்கு கொண்டு வந்தீர்கள் அல்லவா, சட்டத்திற்கு முன்னால் எல்லோரும் சமம் தானே,

முஸ்லிம், கிறிஸ்டியன், இந்து யாராக இருந்தாலும் சரி சட்டத்திற்கு முன்னால் எல்லோரும் சமம். அப்போ எம். உசேனுக்கு சரியா இருக்கிற சட்டம் நூர்பூர் சர்மாக்கு சரியாக இல்லை என்று சொல்ல முடியாது. அதன் பிறகு நீங்கள் வழக்கு நடத்திக் கொள்ளுங்கள். அதன் பிறகு முடிவுகளை கோர்ட் எடுக்கும். ஆனால் இந்த வழக்கு நாடு முழுவதும் உள்ள வழக்குகளை டெல்லிக்கு கொண்டு வர வேண்டும் என கேட்டு, நீதிமன்றத்தில் போட்ட மனுவின் விசாரணை. ஆனால் அதை விட்டு பேசியது ஏற்புடையது ஆகாது.

நீதிபதி என்ன சொல்லியிருக்கிறார் என்றால் இந்த பிரச்சனைக்கு நூர்புர் சர்மா தான் காரணமாம்… இந்த ராஜஸ்தானில் உதய்பூரில்  நடந்த படுகொலைக்கு, மகாராஷ்டிராவில்  அமராவதியில் நடந்திருக்கிறது அப்படி பேசலாமா ? இது சப்ஜெக்ட் மேட்டர் கிடையாது. நான் சட்டபூர்வமாக பேசுகிறேன். சப்ஜெக்ட் மேட்டரில் இல்லாத விஷயம். சரி நீங்கள் கருத்து சொல்லி இருங்கீங்கள் அல்லவா அது எழுத்து வடிவில் ஆர்டரில் இருக்கணுமா வேண்டாமா ?

இப்போ நீங்கள் எல்லாம் உட்கார்ந்து விவாதித்து கொண்டிருக்கிறீர்கள், தேசிய விரோதிகள் எல்லாம் சாயங்காலம் 6:00 மணி ஆனால் பேசுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்களெல்லாம் பேசுகிறீர்கள். ஆனால் ஆர்டரில் இருக்கா என்று நான் தேடி தேடி பார்க்கிறேன், ஆர்டரில் இல்லை, இவர் பெஞ்சில் உட்கார்ந்து பேசியது ஆர்டரில் இல்லை அதனால் அது ஏற்புடைய செயல் அல்ல என தெரிவித்தார்.

Categories

Tech |