ஜேம்ஸ்பாண்ட் போலவும், சங்கர்லால் போலவும், கோட் சூட் போட்டுக்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு என்ற பெயரில் நாடகம் ஆடுகிறார் என மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடி அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மதிய உணவு வழங்கினார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மழைக்காலத்தில் திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படுவதாகவும், மக்களின் குறைகளை காது கொடுத்து கேட்பது இல்லை எனவும், விமர்சித்தார்.
மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் என்று முதலமைச்சர் பொய்யான தகவல்களை தெரிவித்து வருகிறார் என கூறிய அவர், திமுக அரசின் இயலாமையை மறைக்கவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை குறை கூறி விசாரணை நடத்தப்படும் என கூறுவதாகவும் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஜேம்ஸ்பாண்ட் போலவும், சங்கர்லால் போலவும், கோட் சூட் போட்டுக்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு என்ற பெயரில் நாடகமாடுகிறார் என்றும் கூறினார்.