செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஊரக உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய முறைகேடு நடந்தது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த பல கவுன்சிலர்கள் வெற்றி பெற்றார்கள், பல ஊராட்சி மன்ற தலைவர்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் அவர்களெல்லாம் தோல்வி அடைந்ததாக அறிவித்தார்கள். அதனாலதான் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
அந்த உயர்நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் ஆணையம் சரியாக செயல்பட வேண்டும். நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எவ்வித முறைகேடும் இல்லாமல் ஜனநாயக முறைப்படி இந்தத் தேர்தல் நடத்த வேண்டும். உயர்நீதிமன்றம் அறிவித்தபடி, உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு நடத்தும் என்று எதிர்பார்க்கின்றோம்.
ஏனென்றால் அவர்கள் எப்பொழுதுமே நியாயமாக தேர்தல் நடத்திய வரலாறே கிடையாது, அதனால தான் உயர்நீதிமன்றமே இன்றைய தினம் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையம் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று ஊடகத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.