Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோர முகத்தைக் காட்டும் கொரோனா…. ஒரே நாளில் உறுதியானவை…. வைரஸின் பிடியில் பொதுமக்கள்….!!

தேனியில் ஒரே நாளன்று 257 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. மேலும் பொது மக்களை வெளியே செல்லும்போது முகக் கவசம் அணியவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும் வலியுறுத்தியது. இந்த நிலையில் தேனியில் ஒரே நாளன்று 257 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 21,202 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 169 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,963 உயர்ந்துள்ளது.

Categories

Tech |