எகிப்தில் அதிவேக ரயில்கள் இரண்டு நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. மக்களின் தேவைக்கு ஏற்றவாறு சிறப்பு ரயில்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் எகிப்தில் சோஷாக் மாகாணத்தில் அதிவேக ரயில்கள் 2 நேருக்கு நேர் மோதிக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 32 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 165 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து எமர்ஜென்சி பிரேக் கை தவறுதலாக யாரோ இயக்கியதால் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.