சேலம் மாவட்டத்தில் விபத்தின் போது கிழே விழுந்தவர் மீது காவல் துறையினர் பேருந்து ஏறியதால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள கோரிக்காடு பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவர் செவ்வாய்பேட்டையிலுள்ள வெள்ளிப்பட்டறையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சாலையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக அவரது மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் நிலை தடுமாறி சாலையில் பாண்டியன் கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து சட்டென்று அந்த வழியாக வந்த காவல் துறையினர் பேருந்து ஒன்று கிழே விழுந்த பாண்டியன் மீது ஏறி இறங்கியுள்ளது. இச்சம்பவத்தில் பாண்டியன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பாண்டியன் உயிரிழந்து விட்டார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.