Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கோர விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயி…. உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பத்தினர்….!!!

விபத்தில் இறந்த விவசாயின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருவளூர் பகுதியில் லீலா வினோதன் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 28-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கிக் கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த லீலாவினோதனை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அப்போது லீலாவினோதன் மூளை சாவால் மரணம் அடைந்தார். இதனையடுத்து லீலா வினோதனின் குடும்பத்தினர் அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு முன் வந்தனர். இதன் காரணமாக லீலா வினோதனின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டது. இவருடைய உடல் உறுப்புகள் சென்னை சிம்ஸ் மருத்துவமனை, வேலூர் சிஎம்சி மருத்துவமனை மற்றும் நாராயணி மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Categories

Tech |