Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோர விபத்து: எரிந்து நாசமான கார்…. ரிஷப் பண்ட் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டம்…. காவல்துறை தகவல்….!!!!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தில்லியிலிருந்து உத்தரகாண்டிற்கு சென்றுகொண்டிருந்தார். இதையடுத்து கார் ஹம்மத்பூர் ஜால் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இதனால் ரிஷப் பண்ட் முதுகு மற்றும் தலையில் படுகாயம் எற்பட்டது. அதன்பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது, ரிஷப் பண்ட் நெற்றி, கை மற்றும் கால்களில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. அவர் வந்த கார் முற்றிலும் எரிந்து நாசமடைந்தது. இதற்கிடையில் விபத்து நடந்த இடம் போர்க்களம் போன்று காட்சியளிக்கிறது. இந்த கோர விபத்தில் அவர் உயிர்பிழைத்ததே அதிர்ஷ்டம் எனவும் காவலர்கள் கூறுகிறார்கள்.

Categories

Tech |