Categories
திருச்சி திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கோர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி…. சோகம்….!!!!

வேலுார் மாவட்டம், விருபாட்சிபுரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த, 10 பேர், மாருதி சுசுகி காரில், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த புதுார் கிராமத்தில் உள்ள குல தெய்வ கோவிலிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, வேலுார் – திருவண்ணாமலை சாலையில், சந்தவாசல் அடுத்த முனியந்தாங்கல் கூட்ரோடு அருகே பிற்பகல் 2 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது, திருவண்ணாமலையிலிருந்து, வேலுார் நோக்கி சென்ற லாரி, கார் மீது மோதியது.

இதில், காரில் பயணம் செய்த, 3 மாத குழந்தை உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும், படுகாயமடைந்த நான்கு பேர், சிகிச்சைக்காக வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |