Categories
தேசிய செய்திகள்

கோர விபத்து…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி…. பெரும் சோக சம்பவம்…..!!!!!

ஆந்திர மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விஜயவாடா, ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி கார் விபத்துக்குக்குள்ளானது. அந்த காரில் 2 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை என மொத்தம் ஐந்து பேர் பயணித்தனர். இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் இறந்துவிட்டனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவரும் மருத்துவமனை  செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். காரில் பயணித்த அனைவரும் ஐதராபாத்தில் உள்ள சந்தாநகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் மேற்கு கோதாவரி மாவட்டம் ஜங்காரெட்டிகுடெம் பகுதியில் நடைபெறும் குடும்ப விழாவில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்தனர். இந்த விபத்து குறித்து ஆந்திர பிரதேச போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |