பிரேசிலிலுள்ள பிரபல ஏரியை ஒட்டியிருக்கும் மலையில் ஏற்பட்ட பிளவிலிருந்து பெரிய பாறை ஒன்று அங்கு சவாரி செய்த சுற்றுலா படகின் மீது விழுந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.
பிரேசில் நாட்டில் உயரமான மலைகளுக்கிடையே மிகவும் பிரபலமான “பர்னாஸ் ஏரி” அமைந்துள்ளது. இந்த ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து கொண்டிருக்கும்போது அதனை ஒட்டியிருக்கும் உயரமான மலையில் எதிர்பாராதவிதமாக பிளவு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிளவிலிருந்து உருண்ட மிகப்பெரிய பாறை ஒன்று ஏரியில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து கொண்டிருந்த 2 படகின் மீது விழுந்துள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி படகிலிருந்த 6 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.
மேலும் 20 சுற்றுலா பயணிகளை மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதற்கிடையே இந்த விபத்தில் சிக்கிய சுமார் 12 சுற்றுலா பயணிகளை மீட்புக்குழுவினர்கள் மீட்டு பத்திரமாக கரை சேர்த்துள்ளார்கள்.