Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோர விபத்து…. சாலையோரம் இருந்த மரத்தில் மோதிய கார்….ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி…!!!

கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, அண்ணாநகர் பொன்னி காலனி பகுதியில் வசித்து வருபவர் நந்தகோபால். இவருடைய மகன் 41 வயதுடைய கார்த்திகேயன். இவர் சென்னை தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது குழந்தைகளுடன் கோடை விடுமுறை என்பதால் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளார்கள். இவர் தனது மனைவி 35 வயதுடைய லட்சுமி பிரியா, மகள்கள் 11 வயதுடைய மித்ரா, 7 வயதுடைய ஹாசினி மற்றும் தாய் 56 வயதுடைய மஞ்சுளா ஆகியோருடன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தனது காரில் புறப்பட்டு சென்றுள்ளார்கள். காரை கார்த்திகேயன் ஓட்டிச் சென்றுள்ளார்.

ராமேஸ்வரம், தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கு சென்றுவிட்டு நேற்று மதியம் மீண்டும் சென்னைக்கு குடும்பத்துடன் காரில் திரும்பி வந்துகொண்டிருந்தபோது மதியம் 3 மணி அளவில் அரியலூர் மாவட்டம் சத்தியமங்கலம் அருகில் வரும்போது நிலைதடுமாறிய கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் கார்த்திகேயன், லட்சுமிபிரியா, மஞ்சுளா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். மேலும் படுகாயமடைந்த இருவரையும் கீழப்பழுவூர் காவல் துறையினர் மீட்டு அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ஹாசினி பரிதாபமாக இறந்துள்ளார்.

மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மித்ரா அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து கீழப்பழுவூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அரியலூர் கூடுதல் கண்காணிப்பாளர் ரவிசங்கர், அரியலூர் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |