Categories
உலக செய்திகள்

கோர விபத்து…. திடீரென தீ பிடித்த பஸ்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

நைஜீரியா நாட்டில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 5  பேர் உயிரிழந்துள்ளனர். 

நைஜீரியா நாட்டில் தென்மேற்கு பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் லாகோஸ்-இபடான் நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் பஸ் திடீரென  தீப்பிடித்துள்ளது. இதுபற்றி அந்நாட்டின் தெற்கே அமைந்துள்ள ஆகன் மாகாணத்தின் மத்திய சாலை பாதுகாப்பு படையின் உயரதிகாரி அகமது உமர் கூறியதாவது, “அந்நாட்டில் ஆகிர் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில்  சென்று கொண்டிருந்த பஸ் இயந்திர கோளாறால் தீப்பிடித்துள்ளது.

இந்த சம்பவத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும்  9 பேர் படுகாயமடைந்துள்ளனர். மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டு  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஓட்டுனர்கள் வாகனங்களை வெளியே எடுக்கும்போது, அது சாலையில் செல்வதற்கு ஏற்ற வகையிலும் மற்றும் பயணிகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |