Categories
மாநில செய்திகள்

கோர விபத்து: திமுக முக்கிய பிரமுகர்கள் மரணம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

தஞ்சாவூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு முக்கிய திமுக நிர்வாகிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் ருக்மணி கார்டன் என்ற இடத்தில் நடந்த இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் ஒருவர் திமுக மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் என்பதும் மற்றொருவர் திமுக நகரச் செயலாளர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உடல்நிலை மிக கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |