ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி 22 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது
உக்ரைனில் விமானம் ஒன்று விபத்தில் சிக்கி தீ குழம்பாக மாறியதாக அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியது. அதோடு அந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 22 பேர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் இருவர் மட்டும் மிகவும் மோசமான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். சுகுவேர் நகரின் வெளியே விமான நிலையம் ஒன்றில் தரை இறங்குவதற்கு தயாரான நிலையில் அந்த விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது.
விபத்துக்குள்ளானது அந்நாட்டு ராணுவத்திற்கு சொந்தமான விமானம் என்ற காரணத்தினால் அதில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என்ற எண்ணிக்கையை அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டனர். ஆனால் உள்ளூர் ஊடகங்கள் இருபதுக்கும் அதிகமானவர்கள் அதில் பயணித்து இருக்கலாம் என்ற செய்தியை வெளியிட்டுள்ளன. அதில் இருவர் மிகவும் மோசமாக தீக்காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
https://twitter.com/i/status/1309574477068541954