கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பிரேசில் நாட்டில் மராஜோ தீவில் பாரா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திலிருந்து பிலிம் நகரம் நோக்கி இன்று படகு சென்று கொண்டிருந்தது. இந்த படகில் 40 பேர் பயணித்தனர். கொடிஜுபா தீவு அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் இந்த விபத்தில் கடலில் மூழ்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 26 பேர் மாயமாகியுள்ளனர். இதனை அடுத்து கடல் நீரில் மூழ்கி மாயமான 26 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த விபத்துக்குள்ளான படகில் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.