Categories
உலக செய்திகள்

கோர விபத்து…. பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பஸ்…. 19 பேர் பலி…. பிரபல நாட்டில் பெரும் சோகம்….!!

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்கவா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்நிலையில் 30 பயணிகளுடன் ராவல்பிண்டியிலிருந்து குவெட்டாவுக்கு புறப்பட்ட பஸ் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது  திடீரென்று மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த  விபத்தில் சம்பவ இடத்திலேயே 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை உயிரிழந்த 19 பேரின் உடல்கள் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த 11 பேரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கடந்த மாதம் பலுசிஸ்தானில் மினிபஸ் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |