Categories
உலக செய்திகள்

கோர விபத்து…. பள்ளி வேனும் – சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதல்…. 19 சிறுவர்கள் உள்பட 21 பேர் பலி….!!

தென்ஆப்பிரிக்காவில் பள்ளி வேன்-லாரி நேருக்கு நேர் மோதியதில் 19 சிறுவர்கள் உள்பட 21 பேர் பரிதாப உயிரிழந்துள்ளனர்.

தென்ஆப்பிரிக்காவின் கிழக்கு பகுதியில் குவாசுலு-நடால் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள பொங்கோலா நகரில் தனியார் தொடக்க பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வந்துள்ளது. நேற்று முன்தினம் மதியம் பள்ளிக்கூடத்தில் வகுப்புகள் முடிந்ததும் பள்ளி வேன் மாணவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. இந்த வேனில் 5 முதல் 12 வயதுக்குட்பட்ட 19 சிறுவர்கள், டிரைவர் மற்றும் உதவியாளர் என மொத்தம் 21 பேர் இருந்தனர்.

இந்நிலையில் பொங்கோலா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர் திசையில் அதிக வேகத்தில் வந்த சரக்கு லாரி ஒன்று பள்ளி வேனுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பள்ளி வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் வேனிலிருந்த 19 சிறுவர்கள், டிரைவர் மற்றும் உதவியாளர் என 21 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |