Categories
உலக செய்திகள்

கோர விபத்து…. பேருந்தும் டேங்கர் லாரியும் மோதியதில் 20 பேர் பலி…. பெரும் சோகம்….!!

பஞ்சாப் மாகாணத்தில் பேருந்தும் டேங்கர் லாரியும் ஒன்றோடு ஒன்று மோதிய  விபத்தில் 20 பேர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப்  என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் இன்று பேருந்தும் டேங்கர் லாரியும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த  விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். லாகூரிலிருந்து சுமார் 350 கிமீ தொலைவில் உள்ள முல்தான் பகுதியில்  நெடுஞ்சாலையில், அதிக வேகம் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தையடுத்து நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இங்கு லாகூரிலிருந்து கராச்சிக்கு பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த பேருந்து அதிவேகமாக வந்த எண்ணெய் டேங்கர் லாரியில் மோதியதில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.

இந்த விபத்தில் பல பயணிகள் தப்பிக்க வழியில்லாமல் உயிருடன் எரிந்துள்ளனர். இந்த கோர விபத்தில், தீக்காயங்களுக்கு ஆளான ஆறு பயணிகள் முல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதனை தொடர்ந்து அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த விபத்தில் பலியான பெரும்பாலான பயணிகளின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு முற்றிலுமாக எரிந்துள்ளதாகவும், இந்த உடல்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்திற்குப் பிறகு தீ இரண்டு வாகனங்களையும் சூழ்ந்ததால் மீட்பு நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப்படை மற்றும் தீயணைப்பு குழுக்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |