Categories
தேசிய செய்திகள்

கோர விபத்து! பேருந்து- லாரி நேருக்கு நேர் மோதல்….. 16 பேர் பலி…. பதறவைக்கும் சம்பவம்!!!!

ஜார்கண்ட் மாநிலம் பாக்கூர் மாவட்டத்தில் நேற்று பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதியதால் பெரும் விபத்துக்குள்ளாகியது. இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த விபத்தில் பேருந்து கடுமையாக சேதமடைந்துள்ளது. பேருந்தில் பயணம் செய்த 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

26 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக லாரியில் இருந்த சிலிண்டர்கள் எதுவும் வெடிக்கவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 2 வாகனங்களும் அதிவேகத்தில் வந்த போது, கடும் பனி மூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |