Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோலம் போட்டுகொண்டிருந்த மூதாட்டி…. கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த மூதாட்டி மீது கார் மோதி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்துள்ள செக்கான்காடு பகுதியில் மாரியம்மாள்(65) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலையில் மாரியம்மாள் தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதி வழியாக வேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரியம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் மாரியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதற்கிடையே காரை ஓட்டி வந்த டிரைவர் ஈரோட்டை சேர்ந்த விக்னேஷ் என்பவரும் காயமடைந்த நிலையில் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த வெண்ணந்தூர் காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |