Categories
மாவட்ட செய்திகள்

கோலம் போட வந்த பெண் அடித்து கொலை !மயிலாடுதுறையில் நடந்த சோகம் .

மயிலாடுதுறையில் ,கோலம் போட வந்த 40 வயதுடைய பெண்ணை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழிக்கு அருகே உள்ள திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த ஜோதி,அங்குள்ள ஒதவந்தான்குடி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக  பணியாற்றிவந்துள்ளார்.இவரது மனைவி சித்ரா,இன்று காலை அவரது வீட்டின் வாசலில் கோலம் போடுவதற்காக வெளியில் வந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரின் தலையில் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடினர்.பலத்த காயமடைந்த சித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்த சீர்காழி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவத்தை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா கூறுவது : நகை  பறித்தளுக்காக  கொலை நடந்ததா? அல்லது வேறு எதுவும் முன்விரோதம் உள்ளதா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |