பெரம்பலூரில் மதன கோபால சுவாமிவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
பெரம்பலூரில் பிரசித்திபெற்ற மதனகோபால சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு சுவாமி தினமும் வாகனங்களில் புறப்பாடு நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான உதய கருட சேவை நேற்று காலை நடைபெற்றது. கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு திருவீதி உலா நேற்று இரவு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து திருக்கல்யாணம் நாளை மாலை நடைபெறவிருக்கிறது.
புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா நாளை இரவும், வெண்ணைத்தாழி உற்சவம் 27-ஆம் தேதியும், குதிரை வாகனத்தில் திருவீதி உலா 27-ஆம் தேதி அன்று இரவும், தேரோட்டம் 28-ஆம் தேதியும் நடைபெறவிருக்கிறது. இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அரியலூர் உதவி ஆணையர் கிருஷ்ணகுமார், கோவில் தக்கார், திருக்கோவில் பணியாளர்கள், கோவில் செயல் அலுவலர் அனிதா, கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.